உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் கோவில் வீதிகளில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் அவலம்

 ராமேஸ்வரம் கோவில் வீதிகளில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் அவலம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவில் ரதவீதிகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புடன், ஓய்வறைகள் இல்லாததால், பக்தர்கள் சாலையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் அவலம் நிலவுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம், ஓராண்டிற்கு 35 கோடி முதல், 40 கோடி ரூபாய் வரையும், வாகன நுழைவு கட்டணம் மூலம் நகராட்சிக்கு, 2 கோடி ரூபாயும் வருவாயாக கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு கோவில் ரத வீதிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. நிர்வாகம் சார்பில் வடக்கு ரத வீதியில் உள்ள 20 கழிப்பறை கூடங்கள், வரும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை. இதனால், பக்தர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உள்ளது. சிலர் தனியார் விடுதியை தேடிச் செல்லும் நிலையும் உள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வரும் போது இளைப்பாற, நான்கு ரத வீதிகளில் ஓய்வறைகள் இல்லை. ரத வீதி நடைபாதைகளில் பக்தர்கள் உட்கார முயன்றாலும், ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் விரட்டுகின்றனர். வேறுவழியின்றி, பக்தர்கள் சிலர் ரத வீதிகளின் நடுவே அமர்ந்து, ஓய்வெடுக்கின்றனர். சிலர் கோவில் அலுவலகம் முன் பூட்டியிருக்கும் கேட் முன்பு அமர்ந்து சாப்பிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை