உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விடுபட்ட மாணவர்களுக்கு பிப்.16ல் குடற்புழு நீக்க மாத்திரை

விடுபட்ட மாணவர்களுக்கு பிப்.16ல் குடற்புழு நீக்க மாத்திரை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தின முகாமில் விடுபட்ட பள்ளி, கல்லுாரி, அங்கன்வாடி மைய மாணவர்களுக்கு பிப்.16ல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் ரத்த சோகையை தடுக்கும் பொருட்டு தேசிய குடற்புழு நீக்க தினம் ஆண்டுதோறும் பிப்., ஆக., மாதங்கள் இருமுறை நடக்கிறது. நடப்பாண்டில் நேற்று (பிப்.9) கல்லுாரிகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடந்தது.முகாமில் ஒன்று முதல் 19- வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் அல்பன்டசோல் மாத்திரை (குடற்புழு நீக்க மாத்திரை) வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 98 பேருக்கு வழங்குகின்றனர்.நேற்று மாத்திரை பெறாதவர்களுக்கு பிப்.16ல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை