| ADDED : செப் 23, 2011 11:28 PM
கீழக்கரை : கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கொடுக்காததால்,மனைவியை ஏமாற்றி
இரண்டாம் திருமணம் செய்த கணவரையும், தரக்குறைவாக பேசிய இரண்டாவது
மனைவியையும் போலீசார் கைது செய்தனர். கீழக்கரை 500 பிளாட் பகுதியை
சேர்ந்தவர் முகம்மது வாகிதா பானு, 30. இவருக்கும் இதே ஊரை சேர்ந்த செய்யது
முகம்மது மகன் ஜகுபர் சாதிக்கிற்கும் 1.7.98ல் திருமணம் நடந்தது.
வரதட்சணையாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மற்றும் சீர்வரிசை
வழங்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை,
ஜகுபர் சாதிக் துன்புறுத்தினார். பணம் கொடுக்க மறுத்ததால் கோவை ஆமினத்து
சமீமா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கீழக்கரைக்கு அழைத்து
வந்தார். இதை விசாரிக்க சென்ற வாகிதா பானுவை, ஆமினத்து சமீமா தரக்குறைவாக
பேசினார். இது குறித்து வாகிதா பானு போலீசில் புகார் செய்தார். ஜகுபர்
சாதிக், ஆமினத்து சமீமா ஆகியோரை கீழக்கரை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா
கைது செய்தார். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தார். இரண்டாம் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த ஜகுபர் சாதிக் தாய்,
சித்தி கமிதா, சின்னம்மா ஜமிலா, அக்கா பர்சானா, மாமா ஹக்கீம் ஆகியோர் மீது
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.