உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  காக்கூரில் மக்களை அச்சுறுத்தும் நாய்கள்

 காக்கூரில் மக்களை அச்சுறுத்தும் நாய்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்துகின்றன. காக்கூர் கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கோயில், பள்ளி வளாகம், ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளது. முதுகுளத்துார், பரமக்குடி, ராமநாதபுரம் செல்லும் மக்கள் பஸ் ஸ்டாப்பில் பஸ்சிற்காக காத்திருந்து செல்கின்றனர். காக்கூர் கிராமத்தில் கூட்டமாக நாய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. ரோட்டில் சண்டையிட்டு வழியில் செல்லும் வாகனங்களை துரத்துகின்றன. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காக்கூர் கிராமத்தில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை