மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
வாலிநோக்கம் : ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடலில் மீனவர் வலையில் சிக்கிய டால்பின்கள் உயிருடன் மீண்டும் கடலில் விடப்பட்டன.வாலிநோக்கம் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இரண்டு டால்பின்கள் வலையில் சிக்கின. அப்போது உள்ளூர் மீனவர்கள் அதனை உடனடியாக கடலுக்குள் விட்டனர்.வாலிநோக்கம் மற்றொரு பகுதியில் மீனவர்கள் கரைவலை இழுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது 500 கிலோ எடை கொண்ட அரிய வகை பாட்டில் மூக்கு டால்பின் வலையில் சிக்கி கரைப்பகுதியில் உயிருக்கு போராடியது. வேட்டை தடுப்பு காவலர் செல்வம், வனவர் பிரகாஷ், மீனவர்கள் அதனை பத்திரமாக மீட்டு பேரலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமை, டால்பின், கடல் பசு, கடல் குதிரைகளை பிடிப்பது குற்றமாகும். இதுகுறித்து மீனவர்களுக்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டால்பின்களை பத்திரமாக கடலுக்குள் விட்ட மீனவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுரவிக்கபடுவார்கள் என தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago