உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் பயன்பாடு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு நிதி வீணடிப்பு

பள்ளியில் பயன்பாடு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே வளநாடு அரசு உயர் நிலைப்பள்ளியில்​குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் காட்சி பொருளாக உள்ளது. அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திரா நகர், சேமனுார்,செபஸ்தியர்புரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் கடந்த 2018--19ம் நிதி ஆண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.அப்போது முதல் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்நிலையில் கடந்த 2022--23ம் ஆண்டில் ரூ.3.5 லட்சம் செலவில் மேலும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது வரை இரண்டும் பயன்பாடின்றி உள்ளன. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே மீண்டும் சுத்திகரிப்பு இயந்திரங்களை பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை