உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பஸ்சில் ரூ.4.50 கோடி போதை பொருள் பறிமுதல்: டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை

 பஸ்சில் ரூ.4.50 கோடி போதை பொருள் பறிமுதல்: டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை

தொண்டி: தொண்டி அருகே தனியார் பஸ்சில் ரூ. 4.50 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர். தொண்டி அருகே பஸ்சில் போதை பொருள் கடத்துவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ், கண்காணிப்பாளர் பாபுராஜ், போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் தணிக்கை செய்தனர். அறந்தாங்கியில் இருந்து தொண்டி சென்ற தனியார் பஸ்சை பாசிபட்டினம் அருகே மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சின் பின்புறம் உள்ள இருக்கைக்கு அடியில் பாலிதீன் பைகள் இருந்தன. போலீசார் சோதனை செய்த போது மெத் ஆம் பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் சுங்கத்துறையினர் நேற்று விசாரித்தனர். பஸ்சில் சந்தேகப்படும் படியான பயணிகள் குறித்தும், அறந்தாங்கி மற்றும் பல்வேறு பஸ்ஸ்டாப்புகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்