உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழை, பனியால் விறகு டன் ரூ.500 உயர்வு கரிமூட்டம் பாதிப்பால் தொழிலாளர் கவலை

மழை, பனியால் விறகு டன் ரூ.500 உயர்வு கரிமூட்டம் பாதிப்பால் தொழிலாளர் கவலை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை, பனியால் விறகு டன்னுக்கு ரூ.500 உயர்ந்துள்ளதால் முதலீடு செலவு அதிகரித்துள்ளதாக கரிமூட்டம்தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இம்மாவட்டத்தில் பிரதான தொழிலான விவசாயம் மழைபெய்தால் மட்டுமே நடைபெறும்.வறட்சியால் பெரும்பாலான தரிசுநிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தமரங்களை வெட்டி கரி மூட்டத் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.குறிப்பாக கடலாடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, பரமக்குடி,ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் அதிகளவில் கரிமூட்டத்தொழில் நடக்கிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் விவசாயப்பணிகள் தவிர மற்ற நாட்களில் விறகு வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் ஈடுபடுகின்றனர்.பருவமழை அதிகரிப்பால் நிறுத்தப்பட்டிருந்த கரிமூட்டம் தொழில் சில மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் விறகு விலை டன்னுக்கு ரூ.500 வரை விலை உயர்ந்துள்ளதால் முதலீடு அதிகரித்துஉள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துஉள்ளனர்.இதுகுறித்து கரிமூட்டத் தொழிலாளி முத்துராஜ் கூறுகையில், 20ஆண்டுகளாக கரிமூட்ட தொழில் செய்கிறோம். இங்கிருந்து கேரளா, உ.பி.,போன்ற வெளி மாநிலங்களுக்கு எரிபொருளுக்காக வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.சில மாதங்களுக்கு முன் டன் 3500க்கு விற்ற விறகு ரூ.500 உயர்ந்து ரூ.4000த்திற்கு விற்கிறது.வேர் கட்டை கரிக்குமூடை ரூ.1460க்கும், விறகுகரிக்கு ரூ.1100 என விலை உள்ளது.விறகு விலை உயர்வு, ஆட்கள்கூலி என முதலீடு அதிகரித்துள்ளதால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட சிரமப்படுகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி