உள்ளூர் செய்திகள்

இன்ஜினீயர் பலி

பரமக்குடி: பரமக்குடி அருகே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜய் 26. பி.இ., பட்டதாரியான இவர் இன்று (நவ.,20) காலை பரமக்குடியில் இருந்து டூவீலரில் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திருவாடி அருகே இருவழிச்சாலையில் வேகமாக சென்ற போது டூவீலரில் இருந்த சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் சென்ற நிலையில் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றார். இதில் சைடு ஸ்டாண்ட் ரோட்டில் இடித்து நிலை தடுமாறி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி