உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வேளாண் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி

 வேளாண் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி

ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் மண்டபம் வட்டாரம் சின்னுடையார் வலசை கிராமத்தில் நன்னெறி வேளாண் வழிமுறைகள் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் செல்வம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) அம்பேத்குமார் முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான விதை நேர்த்தி மற்றும் உப்பு நீர் கரைசல் மூலம் நல் விதை தேர்வு செய்தல் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். நெற்பயிருக்கு போதியளவு ஈரம் உள்ள சூழ்நிலையில் விதைத்த 25ம் நாள் மற்றும் 45வது நாட்களில் நானோ யூரியா தெளிப்பு செய்வதன் மூலம் யூரியா அதிகளவில் இடுவதை தவிர்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சியில் வேளாண் அலுவலர் மோனிஷா, துணை அலுவலர் தாமஸ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை