உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இயந்திர அறுவடையால் வீணாகும் வைக்கோல்கையால் கதிரடிக்கும் பணியில் விவசாயிகள்

இயந்திர அறுவடையால் வீணாகும் வைக்கோல்கையால் கதிரடிக்கும் பணியில் விவசாயிகள்

திருவாடானை: அறுவடை இயந்திரத்தால் வைக்கோல் வீணாவதால் கையால் நெற்கதிர்களை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் விவசாயிகள் ஏர் உழுவது, நாற்று நடவு மற்றும் அறுவடை என அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.நெற்பயிர்களை ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் நீளமான வைக்கோல் கிடைக்கும். அதை கால்நடை வளர்ப்போர் வாங்கி இருப்பு வைத்து மாடுகளுக்கு தீவனமாக வழங்குவர். ஆனால் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது வைக்கோல் துண்டு, துண்டாக வீணாகிறது.விவசாயிகள் கூறியதாவது:இயந்திரத்தில் அறுவடையாகும் வைக்கோலை மாடுகள் சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்படுகிறது. சிறுமழை பெய்தாலே வைக்கோல் அழுகி வீணாகிறது. வேலை ஆட்கள் பற்றாக்குறை, கால விரயத்தை தவிர்க்க இயந்திர அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இயந்திர அறுவடையால் வைக்கோல் சிறு, சிறுதுண்டுகளாக ஆவதால்பயன்படுத்த முடியவில்லை. ஆகவே நாங்களே கையால் நெற்கதிர்களை அடித்து நெல்லை தனியாக பிரித்து, வைக்கோலை சேகரித்து மாடுகளுக்கு உணவாக்குகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை