உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய், மல்லி சாகுபடிக்காக உழவு செய்யும் விவசாயிகள்

மிளகாய், மல்லி சாகுபடிக்காக உழவு செய்யும் விவசாயிகள்

உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கை அருகே கொம்பூதி, கருக்காத்தி, மேலமடை, பனையடியேந்தல், மரியராயபுரம், நல்லிருக்கை, கோனேரி உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய், மல்லி சாகுபடி செய்யப்படுகிறது.சமீபத்தில் பெய்த மழையால் விவசாயிகள் டிராக்டரில் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ரூ.900 வீதம் வாடகை கொடுத்து நிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கருக்காத்தி விவசாயிகள் கூறியதாவது:கடந்த நவ, டிச., மாதங்களில் பெய்த பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு உள்ளது. பெரும்பாலான கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. மார்கழி மாதத்தில் உழவு செய்யப்பட்டு மிளகாய், கொத்தமல்லி நடவு செய்யப்படுகின்றன. உரிய முறையில் தண்ணீர் கிடைப்பதால் நடப்பாண்டில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்