உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு தொல்லை மீனவருக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை மீனவருக்கு சிறை

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் 13 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மீனவர் முத்துலிங்கத்திற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ராமேஸ்வரம் வேர்க்கோடு இந்திரா நகர் அய்யாதுரை மகன் முத்துலிங்கம் 40. கடந்தாண்டு மே மாதம்13 வயது உறவினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவரை போக்சோ சட்டத்தில் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி கோபிநாத், முத்துலிங்கத்திற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பணத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள்சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி