உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தடையை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு அபராதம்

 தடையை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு அபராதம்

தொண்டி: புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபு தாகிர் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண் டலத்தால் தொண்டி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். நேற்று முன் தினம் தொண்டி புதுக்குடி மீனவர்கள் லைட் வெளிச்சத்தில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அருகே சென்ற போது தப்பினர். இது சம்பந்தமாக 4 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று காலை தொண்டி மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த போது காற்றழுத்த தாழ்வு எச்சரிக்கை அறிவிப்பை மீறி மீன்பிடித்து விற்பனை செய்த 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ.11,500 அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. நவ.,28, 29 தேதிகளில் பலத்த காற்று, மழை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கண்டிப்பாக கடலுக்கு செல்லக்கூடாது. மீறினால் கடல் ஒழுங்குமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை