உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சோலியக்குடி ஜெட்டி பாலத்தை சீரமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்    

சோலியக்குடி ஜெட்டி பாலத்தை சீரமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்    

தொண்டி; தொண்டி அருகே சோலியக்குடி ஜெட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று விசைபடகு மீனவர் சங்க ராமநாதபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி கூறினார்.அவர் கூறியதாவது: தொண்டி அருகே சோலியக்குடியில் 200 விசைபடகு மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட ஜெட்டி பாலம் உள்ளது. அந்த பாலத்தில் மீன்களை இறக்கி வைக்கவும், படகுகளை கட்டி வைக்கவும் மீனவர்கள் பயன்படுத்தினர். அந்த பாலம் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் விசைபடகுகளை நிறுத்தி மீன்களை இறக்கி வைக்க சிரமப்படுகின்றனர். இப்பாலத்தை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு பலதடவை மனு கொடுத்தும் பலனில்லை. இரவில் மீனவர்கள் பாலத்தின் மீது நடந்து செல்லும் போது அச்சமாக உள்ளது என்றார்.மீன்வளத்துறையினர் கூறுகையில், புதிய பாலம் கட்ட ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டிற்கு பின்பு புதிய பாலம் கட்டப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை