மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
21 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
23 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
23 minutes ago
தொண்டி: தொண்டி கடலில் டால்பின்களை மீனவர்கள் பிடிக்கக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். கடலில் வாழும் உயிரினங்களில் அபூர்வமான வகையை சேர்ந்தது டால்பின். தொண்டி கடலில் நேற்று முன்தினம் டால்பின் கூட்டம் துள்ளி குதித்து விளையாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிய நிகழ்வாக 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் துள்ளி குதித்து விளையாடிய காட்சியை மீனவர்கள் வீடியோ எடுத்து பரப்பினர். இதை பார்த்த மக்கள் வியப்படைந்தனர். சில டால்பின்கள் மீனவர்களின் படகுகளுக்கு அருகில் வந்தது. இது குறித்து மீனவர்கள் கூறுகையில், தொண்டி கடற்பரப்பு ஆழ்கடல் இல்லை. பல ஆண்டுகளாக மீன் பிடிக்கிறோம். ஆனால் கூட்டமாக வந்த டால்பின்களை முதல் முறையாக பார்த்தோம். பெருங்கடலில் தான் டால்பின்கள் வசிக்கும். ஆனால் ஆழ்கடல் இல்லாத தொண்டி கடலுக்கு வந்தது வியப்பாக உள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றம் காரணமாக வந்திருக்கலாம் என்றனர். தொண்டி மரைன் போலீசார் கூறுகையில், கடல் பசு, டால்பின், ஆமை போன்ற அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் டால்பின்களை பிடிக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
21 minutes ago
23 minutes ago
23 minutes ago