| ADDED : டிச 06, 2025 10:06 AM
திருவாடானை: பேக்கரிகளில் காலாவதி யான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் உறங்குகின்றனரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, மங் களக்குடி, சின்னக்கீர மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சில பேக்கரிகளில் தரமற்ற, காலாவதியான தின் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திருவாடானை மக்கள் கூறியதாவது: சில பேக்கரிகளில் காலாவதியான பப்ஸ், கேக் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தாதால் உறக்கத்தில் இருப்பதால் காலாவதியான கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. காலாவதியான தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கெட்டுகளில் காலாவதி தேதியும் குறிப்பிடவில்லை. பொருட்களை வாங்கும் சிலர் சுவைத்து விட்டு கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர். பேக்கரி ஸ்வீட்ஸ்களில் காலாவதி தேதி இல்லாததால், அவர்கள் காலாவதியானாலும் விற்கின்றனர். இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றனர்.