உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விஷ்ணுகாந்த் தலைமை வகித்தார். வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆலோசகர் அனிபா அண்ணா, செயலாளர் முகைதீன் கனி, பொருளாளர் சுரேஷ் மற்றும் வனப்பாண்டி, சிவா, வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏராளமானோர் கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்