உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாற்றுத்திறனாளி  மாணவருக்கு  இலவச மருத்துவ முகாம்

 மாற்றுத்திறனாளி  மாணவருக்கு  இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம்: மண்டபம் ஒன்றிய வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உச்சிபுளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மனநல மருத்துவர், எலும்பியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், கண் பரிசோதகர், மருத்துவக்குழு மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் பங்கேற்ற னர். இதில் 83 மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் கணேசன் பாண்டியன், வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ரமேஷ் பங்கேற்றனர். மதிய உணவு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா, ஒருங்கிணைப்பாளர் வீரஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை