உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் வாக்குவாதம்

 பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் வாக்குவாதம்

திருவாடானை: திருவாடானை, தொண்டி பஸ்ஸ்டாண்டுகளில் தினமும் நுாற்றுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் சில அரசு, தனியார் பஸ்களுக்கு 5 நிமிட இடைவெளியில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் பஸ் புறப்பட்டு செல்வதில் டிரைவர், கண்டக்டரிடையே தகராறு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை 4:40 மணிக்கு மதுரையிலிருந்து தொண்டி செல்லும் அரசு, தனியார் பஸ் திருவாடானை பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. இரு பஸ்களுக்கும் 5 நிமிட இடைவெளி இருந்தது. இதில் இரு பஸ் டிரைவர், கண்டக்டரும் யார் முந்தி செல்வது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்த மற்ற டிரைவர், கண்டக்டர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இதனால் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது- யார் முந்தி செல்வது என்ற பிரச்னை டிரைவர், கண்டக்டர்களிடையே அடிக்கடி ஏற்படுகிறது. சில நேரங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு சம்பவங்களும் நடக்கிறது. போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ