போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ்
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள் கோயில் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை புகாரில் ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இப்பள்ளியில் 2021 டிச.,ல் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அப்போது பரமக்குடியை சேர்ந்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் 56, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த ராமராஜ் 43, ஆகியோர் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், தொடுவதாகவும் 13 மாணவிகள் புகார் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புகாரில் இரு ஆசிரியர்கள் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உயர்மட்ட குழுவினர் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் ஆல்பர்ட் வளவன், ராமராஜ் ஆகியோர் மீதான புகார் நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் ஆல்பர்ட் வளவனை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) ராஜேந்திரன் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். ராமராஜிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரது பதிலின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.