உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதசுவாமி கோவிலில் கவர்னர் ரவி துாய்மை பணி

ராமநாதசுவாமி கோவிலில் கவர்னர் ரவி துாய்மை பணி

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் நேற்று வந்த தமிழக கவர்னர் ரவியை, கலெக்டர் விஷ்ணு சந்திரன் வரவேற்றார். வேட்டி, சட்டை அணிந்து கவர்னர் தன் மனைவி லட்சுமியுடன் காலை 10:30 மணிக்கு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், தர்ப்ப சயனராமர், சந்தான கோபால கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர் சன்னிதிகளில் கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார்.அங்கிருந்து காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு கவர்னர் வந்தார்; சுவாமி, அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் பங்கேற்றார். மதியம் 12:20 மணிக்கு துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக கோவில் கிழக்கு ரதவீதியில் கவர்னர், தன் மனைவியுடன் துாய்மை பணி செய்தார். அதன் பிறகு விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மதியம் 12:50 மணிக்கு புறப்பட்டு, ராமநாதபுரத்தில் ஓய்வு எடுத்து, மதியம் 2:50 மணிக்கு காரில் மதுரை சென்றார்.

15 பேர் கைது

------------திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு கவர்னர் நேற்று சென்ற போது கருப்புக்கொடி காட்ட முயன்ற நாகேசுவரன், பாவெல், ஆதி தமிழர் கட்சி மண்டல செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்