மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
9 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
11 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
11 minutes ago
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
14 minutes ago
ராமநாதபுரம்: தேவையுள்ள இடங்களில் கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த மாநில சிறுபான்மையினர் ஆணையம்ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றஅவர் கூறியதாவது: மாவட்டந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் சிறுபான்மையின மக்களை சந்தித்து ஓராண்டில் 1477 மனுக்கள் பெறப்பட்டு 1156க்கு தீர்வு காணப்பட்டது. 38 வது மாவட்டமாக சென்னையில் நவ.,27ல் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள முக்கிய பிரச்னையான கல்லறை தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கி இடம் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கல்லறை சுற்றுச் சுவர் அமைத்தல், அங்கு புதைக்க இடையூறாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி னர். மக்களின் கோரிக்கைகள் குறிப்பெடுத்துள்ளோம். அவற்றின் மீது 15 நாள் முதல் ஒரு மாதத்திற்கு தீர்வு காணப்படும். தேவையுள்ள இடங்களில் கல்லறைத்தோட்டம், கபர்ஸ்தான் அமைக்கப்படும். ஆணையத்தின் பரிந்துரை காரணமாக சிறுபான்மையினர் அதிகமாக வாழும் கிராமப்புற பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வைத்துள்ள சர்ச், மசூதி களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
9 minutes ago
11 minutes ago
11 minutes ago
14 minutes ago