| ADDED : டிச 06, 2025 05:37 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை, பூப்பாண்டியபுரம், எஸ்.தரைக்குடி, எல்லைபிஞ்சை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான பனைமரக் காடுகள் உள்ளன. பனை மரங்களுக்கு மத்தியில் டிராக்டர் மூலம் உழவு செய்து அவற்றில் கம்பெனி ரக நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் கூறிய தாவது: இப்பகுதியில் பனை மரத்திற்குள் ஊடுபயிராக நிலக்கடலை பயிரிடு கிறோம். இதனால் மண்ணை கிளறி விவசாயம் செய்யும் போது பனை மரத்துக்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்கள் கிடைக்கிறது. பதநீர் காலங்களில் அதிகளவு திறன் வாய்ந்ததாக உள்ளது. சாயல்குடி பகுதியில் விளையக்கூடிய நிலக் கடலை கம்பெனி கடலை. இவை அதிக எண்ணெய் சத்து கொண்டது. 90 நாள் பயிராகும். தற்போது பெய்து வரும் மழையை கணக்கிட்டு நிலக் கடலைக்கு மண் அணைப்பு செய்வதால் பக்க வாட்டு வேர் பகுதியில் அதிக அளவு நிலக்கடலை உபரியாக கிடைக்கும். சாயல்குடி, எஸ்.தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்க கூடிய நிலக் கடலை மதுரை, சென்னை உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் விற்கப்படுகிறது. பனை மரத்திற்கும் நிலக் கடலைக்கும் பயன் தரும் நிலையில் விவசாயம் நடக்கிறது என்றனர்.