உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊர்காவல் படை, கடலோர பாதுகாப்பு பணிக்கு மீனவ இளைஞருக்கு அழைப்பு

ஊர்காவல் படை, கடலோர பாதுகாப்பு பணிக்கு மீனவ இளைஞருக்கு அழைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்காவல் படை, மீனவர் இளைஞர் கடலோரப் பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் பிப்.11க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்ட போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படையில் மீனவ இளைஞர்கள் இணைந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கோயில் விழாக்கள், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர்.அதன்படி 2024ல் ஊர்காவல் படை (இருபாலரும்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படையில் (ஆண்கள் மட்டும்) பணிபுரிய தேர்வு செய்யப்பட உள்ளனர். பிப்.17ல் ராமநாதபுரம் ஆயதப்படை மைதானத்தில் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட நல்ல உடற்தகுதியுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள இளைஞர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் வர வேண்டும். கடலோர பாதுகாப்பு படையில் சேர்வதற்கான பயிற்சியில் கடலோ மீனவர் கிராம மீனவ இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் பிப்.5 முதல் விண்ணப்பங்களை பெற்று பிப்.11க்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை