உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரணம் தப்பினால் மரணம்

கரணம் தப்பினால் மரணம்

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள வெண்ணீர் வாய்க்கால், வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, ஆத்திகுளம், கீரனுார், நல்லுார், ஏனாதி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, பூக்குளம், சித்திரங்குடி, மேலச்சிறுபோது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1000 மாணவர்களுக்கும் மேல் முதுகுளத்துாரில் உள்ள தனியார், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கின்றனர்.இதில் ஒருசில மாணவர்கள் அரசு விடுதியில் தங்கி படிக்கின்றனர். காலை நேரத்தில் கிராமங்களில் இருந்து பஸ் வசதி இருப்பதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்கின்றனர். இருந்த போதும் சில கிராமங்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். படியில் தொங்கியபடி செல்லும் பயணம் மாணவர்களுக்கு தொடர்கதையாக உள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கின்றனர். காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.இதுகுறித்து பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் வேறு வழியின்றி பஸ்சில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது. ஒரு சிலர் கூடுதல் பணம் செலவு செய்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர்.மாணவர்களின் ஆபத்தான பயணத்தை தவிர்க்கும் வகையில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.எனவே மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் அதிகமான மாணவர்கள் பயணம் செய்யும் வழித்தடங்களில் கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீசார் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை