| ADDED : நவ 22, 2025 02:53 AM
ராமநாதபுரம்: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி மகள் வீட்டில் ஜி.எஸ்.டி., சோதனை குறித்து தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் 'உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்' எனக் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. தமிழகம் முழுவதும் போதை கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. பொது மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை. எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். இரண்டு பேர் தற்கொலை செய்ததாக தகவல் வந்தது. பணிச்சுமையை கண்காணித்து அரசு சரி செய்ய வேண்டும். சட்டசபை தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன.,9ல் தே.மு.தி.க., மாநாட்டில் தெரிவிப்போம் என்றார். அமைச்சர் பெரியசாமி மகள் வீட்டில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை குறித்து கேட்டதற்கு, 'உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும் என்று ஏற்கனவே விஜயகாந்த் சொல்லியுள்ளார். அதைத்தான் நானும் சொல்கிறேன் என்றார்.