உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மிரட்டும் தெரு நாய்கள் ரோட்டில் நடக்க முடியல மக்கள் பீதி

பரமக்குடியில் மிரட்டும் தெரு நாய்கள் ரோட்டில் நடக்க முடியல மக்கள் பீதி

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி குடியிருப்புகளை திரியும் தெரு நாய்களால் மக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நாய்களுக்கு கு.க., செய்யாமல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் ஒவ்வொரு தெருவிலும் 20க்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன.மேலும் நகராட்சியில் நிரந்தர ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாய்கள் உணவு கிடைக்காமல், தங்கள் குட்டிகளை பாதுகாக்கும் நோக்கில் கடிக்க முற்படுகிறது. இதனால் வெளியூர் மற்றும் பிற தெருக்களில் இருந்து மக்கள் புதிதாக செல்லும் போது அவர்களை நாய்விரட்டுகின்றன. பலரும் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர். நோய்வாய்ப்பட்ட நாய்களால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே நகராட்சி அதிகாரிகள் தொற்று பாதித்த நாய்களை அப்புறப்படுத்துவதுடன், தொடர்ந்து நாய்களுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ