உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

பரமக்குடி: -பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது.கீழ முஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஷாஜகான், ஜமாத் பொருளாளர் வியாகத் அலிகான் முன்னிலை வகித்தனர். சபை செயலாளர் சாதிக் அலி வரவேற்றார். அப்போது எம்.பி., நிதி ரூ.18 லட்சம், கீழ முஸ்லிம் ஜமாத் நிதி ரூ. 10 லட்சம் என ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கை நவாஸ்கனி எம்.பி., திறந்து வைத்தார்.பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி, கவுன்சிலர்கள் அப்துல்மாலிக், ஜீவரத்தினம் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், கல்வி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ