உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கோயில்களில் தானியங்கி மணி ஒலி அதிகரிப்பு  : பொதுமக்கள் மகிழ்ச்சி

 கோயில்களில் தானியங்கி மணி ஒலி அதிகரிப்பு  : பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவாடானை: கோயில்களில் தானியங்கி கருவி மூலம் ஒலிக்கும் மணி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் கோயில் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு கோயில்கள் அதிகமாக உள்ளன. கிராம மக்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக கோயில்களை கருதுகிறார்கள். கோயில்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து மக்களிடம் ஆன்மிகத்தை வளர்க்கிறது. அவர்களின் தினசரி வாழ்க்கையில் விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் கோயில்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமங்களில் உள்ள கோயில்கள் மக்களுக்கு ஒரு அடையாளத்தையும், ஆன்மிகத்தையும் தருகின்றன. திருவாடானை, தொண்டியில் உள்ள பெரும்பாலான கோயில்களில் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஸ்லோகம் பிளேயர்கள் மூலமாக தானியங்கி மணிகள் ஒலிக்கின்றன. இந்த மணிகள் தானாக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் கூறுகையில், இந்த தானியங்கி மணியால் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து தங்களது அன்றாட பணிகளை துவக்க முடிகிறது. ஐயப்ப பக்தர்கள் காலை எழுந்து குளித்து பஜனை செய்ய ஏதுவாக உள்ளது. வரும் மார்கழி மாதத்தில் பெண்கள் கோலமிடவும், கோயில்களுக்கு செல்லவும் இந்த தானியங்கி மணி ஒலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி