உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடத்தல் அதிகரிப்பு: தடுக்க போலீசார், வனத்துறை கூட்டுரோந்து அவசியம்

ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடத்தல் அதிகரிப்பு: தடுக்க போலீசார், வனத்துறை கூட்டுரோந்து அவசியம்

சாயல்குடி அருகே ரோஜ்மா நகரில் இருந்து கீழக்கரை, புதுமடம், மண்டபம், தனுஷ்கோடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதிகளில் இலங்கைக்கு சட்ட விரோதமாக கடத்தல் பொருள்கள் கடத்தும் செயல் அரங்கேறி வருகிறது.கடற்கரையை ஒட்டி உள்ள கிராமங்களில் உள்ள சில இளைஞர்களை தேர்வு செய்து மூளைச் சலவை செய்து பொருள்கள் கடத்தப்படுவது தொடர்கிறது. குறிப்பாக தங்கம், பீடி இலை பண்டல்கள், மஞ்சள் மூடைகள், கடல் அட்டைகள், இஞ்சி, சுக்கு மூடைகள், கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவைகளை அவ்வப்போது பிடிக்கப்படுகிறது. ஆனால் அவற்றில் முக்கிய நபர்கள் பிடிபடுவதில்லை.கஸ்டம்ஸ் துறையினருக்கு ஏற்ற வகையில் கடலில் ரோந்து சுற்றுவதற்கான போக்குவரத்து படகுகள் சேதமடைந்து உள்ளது. இதேபோன்று மன்னார் வளைகுடா வனச்சரகத்திற்கும் அதிநவீன ரோந்து படகுகள் இல்லாமல் பைபர் நாட்டுப் படகு குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.மண்டபம், கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட 14 தீவுகளும், சாயல்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏழு தீவுகளும் உள்ளடங்கிய 21 தீவுகள் மார்க்கமாக கொண்டு துாத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதிகள் மற்றும் சர்வதேச கடல் எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் செய்ய வேண்டும்.அதற்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, போலீசார், மரைன் போலீசார், கஸ்டம்ஸ், நுண்ணுறிவு போலீசார் மன்னார் வளைகுடா உயிர்க்கோள வனச்சரகத்தினர் உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே கடத்தல்காரர்களின் தொடர் நடவடிக்கையை கண்காணித்து கட்டுப்படுத்த முடியும்.மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராமங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.சாயல்குடி, மே 20--மன்னார் வளைகுடா ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், கீழக்கரை, புதுமடம், தொண்டி உள்ளிட்ட இடங்களில் இலங்கை வழியாக தங்கம், கஞ்சா, பீடி இலை பண்டல் கடத்தல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நுண்ணறிவுபிரிவு, மரைன் போலீசார், மன்னார் வளைகுடா வனத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து கூட்டுரோந்து மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை