உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் சூரிய தீர்த்த குளம் சீரமைக்க வலியுறுத்தல்

உப்பூர் சூரிய தீர்த்த குளம் சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் விநாயகர் கோயில் சூரிய தீர்த்த குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலுக்கு தினமும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள சூரிய தீர்த்த குளத்தில் நீராடி கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் சூரிய தீர்த்த குளத்தை முறையாக துார்வாரி ஆழப்படுத்தாததால் மழைக்காலங்களில் குறைந்த அளவு தண்ணீரே தேங்குகிறது. மேலும் ஊருணியை துார்வாராத நிலையில் மண் மேடாக உள்ளதாலும் தேங்கும் நீரும் விரைவில் காலியாகும் நிலை உள்ளது. இதனால் பக்தர்களும் சூரிய தீர்த்த குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தற்போது தீர்த்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீரே உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக குளத்தை சுத்தப்படுத்தி ஊருணியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ