உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிலுவை அகவிலைப்படி  அரசு வழங்க வலியுறுத்தல்

நிலுவை அகவிலைப்படி  அரசு வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் பணிநிறைவு பெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை அரசு உடனே வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.ராமநாதபுரம் வருவாய்த்துறையினர் மனமகிழ்மன்றத்தில் புதியதாக தேர்வான நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட தேர்தல் ஆணையர் நாகஜோதி, துணைத்தேர்தல் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத்தலைவராக விவேகானந்தம், துணைத்தலைவராக ரெங்கன், செயலாளராக பழனியாண்டி, இணை செயலாளராக சந்திரசேகரன், மாவட்ட பொருளாளராக கதிரேசன்பதவியேற்றனர். மாநில மையத்தின் நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவது, நிலுவையில்உள்ள அகவிலைப்படியை அரசு உடனே வழங்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை