உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கல்

ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கல்

கமுதி : கமுதி அதனை சுற்றியுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ., சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ராமநாதபுரம் லோக்சபா பொறுப்பாளர் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளிடம் கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.பின்பு கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க., அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் கணபதி, ஒன்றிய தலைவர்கள் பூபதிராஜா, அழகுமலை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை