உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜெ., பிறந்த நாள் விழா

ஜெ., பிறந்த நாள் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் திருப்பாலைக்குடி பாண்டி கோயில் பகுதியில் ஒன்றியச் செயலாளர் திருமலை தலைமையில் ஜெ.,பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் சேதுராமன், பசுருல்ஹக் கலந்து கொண்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் சனவேலியில் ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.ஆர்.எஸ்.மங்கலத்தில் நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற ஜெ.,பிறந்த நாள் விழாவில் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஷாஜகான், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கார்மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.*கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., நகர் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சரவண பாலாஜி முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெ., உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள், பிரட் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை