உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஜெ., நினைவு நாள்: மலர் துாவி மரியாதை

 ஜெ., நினைவு நாள்: மலர் துாவி மரியாதை

கமுதி: கமுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கமுதி பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெ., படத்திற்கு நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். இதே போன்று முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஜெ., படத்திற்கு எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுந்தர பாண்டியன், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் சண்முகபாண்டியன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி