உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காளியம்மன் கோயில் விளக்கு பூஜை

காளியம்மன் கோயில் விளக்கு பூஜை

கீழக்கரை : கீழக்கரை அருகே லட்சுமிபுரம் செல்லும் வழியில் குலுமாவிளக்கு காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி களரி உற்ஸவ விழாவை முன்னிட்டு பிப்.13ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.மாசி களரி விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம், அக்னி சட்டி ஊர்வலம் லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு அம்மன் சன்னதி வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை