உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழு நோய் பராமரிப்பு முகாம்

தொழு நோய் பராமரிப்பு முகாம்

முதுகுளத்துார் -முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊனத்தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடந்தது. துணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை டாக்டர் நாகரஞ்சித், கீழத்துாவல் வட்டார டாக்டர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு ஊனத்தடுப்பு முறைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ஜெயபால முருகன், சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகர சேதுபதி செய்தனர். உடன் செவிலியர்கள் பணியாளர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை