உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஹிந்து மதம் குறித்து  அவதுாறு செய்தவர் கைது

 ஹிந்து மதம் குறித்து  அவதுாறு செய்தவர் கைது

ராமநாதபுரம்: ஹிந்து மதம் குறித்து வலைதளங்களில் அவதுாறு பரப்பியவர், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்த போது கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையை சேர்ந்தவர் அலி சாகீர், 53. இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். வலைதளங்களில் ஹிந்து மத கடவுள், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் குறித்து அவதுாறாக பதிவிட்டதாக மண்டபம் பா.ஜ., ஒன்றிய நிர்வாகி கதிரவன், கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார். மண்டபம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், துபாயில் இருந்து அலி சாகீர் நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். மதுரைக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை, விமான நிலைய அதிகாரிகள் தடுத்து, மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மண்டபம் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி