உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பெருமாள் கோயிலில் மாசி மகம் கஜேந்திர மோட்ச லீலை

பரமக்குடி பெருமாள் கோயிலில் மாசி மகம் கஜேந்திர மோட்ச லீலை

பரமக்குடி : பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசி மகம் விழாவையொட்டி கஜேந்திர மோட்ச லீலை நடந்தது.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகினார். தொடர்ந்து 6:00 மணிக்கு கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பாடாகி வைகை ஆற்றில் இறங்கி மண்டகப்படியை அடைந்தார்.அங்கு கஜேந்திரன் என்ற யானைக்கு முதலையிடம் இருந்து மோட்சம் அளிக்கும் லீலை நடந்தது. பின்னர் தீர்த்தவாரி நிறைவடைந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.*அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராமர் நேற்று காலை 8:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்து பரமக்குடி ராமானுஜ பஜனை மடத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலை 6:30 மணிக்கு சக்கரத்தாழ்வார் பக்தி உலா வந்து கஜேந்திர மோட்ச லீலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை