உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாசி மகம் சிறப்பு பூஜை

மாசி மகம் சிறப்பு பூஜை

திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மாசி மகம் பவுர்ணமியுடன் கூடி வரும் மகம் நட்சத்திர நாளே மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த விழாவை முன்னிட்டு நேற்று திருவெற்றி யூர் பாகம்பிரியாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி