ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அவரது உருவ புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் முனியசாமி, நகரச் செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வண்டிக்காரத்தெருவில் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமசேது, நகர அவைத்தலைவர் ராமமூர்த்தி, ராம்கோ தலைவர் தஞ்சிசுரேஷ், மகளிரணி, இளைஞர்பாசறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.அழகன்குளத்தில் பஸ் ஸ்டாண்டில் எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். கிளைச்செயலாளர் ஜெயலானி, மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், சனவேலியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். திருப்பாலைக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமலை தலைமை வகித்தார். ஒன்றிய மீனவர் அணி செயலாளர் கருமலையான் பங்கேற்றார். ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். முன்னாள் நகர் செயலாளர் சீனி முகமது பங்கேற்றனர்.கீழக்கரை: அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடந்தது. கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சரவண பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். *உத்தரகோசமங்கையில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமையில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் ராமு, சேதுராஜா, பாஸ்கர சேது, பழனி முருகன், ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.