| ADDED : டிச 27, 2025 05:27 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்.,நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றியச் செயலாளர்கள் ராஜா, திருமலை, நகர் செயலாளர் ரஹ்மத்துல்லா, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன் உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். *கமுதியில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் எம்.ஜி.ஆர்.,படத்திற்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன், மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் சண்முகயாபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன் முன்னிலையில் மலர்துாவி மரியாதை செய்தனர்.