வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அஞ்சு மணி நேரம் ஆய்வு நடத்துனா மட்டும் விடிஞ்சுரப் போகுதா? போங்க. போய் பொழப்பைப் பாருங்க. அடுத்த முறை தகுதியானவங்களுக்கு ஓட்டுப் போடுங்க.
ராமநாதபுரம்; ராமநாதபுரம் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட வந்த அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் ஒரு தெருவை மட்டும் பார்த்துவிட்டு 15 நிமிடத்தில் சென்றதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.நவ.20, 21ல் விடிய விடிய பெய்த தொடர் மழையால் ராமநாதபுரத்தில் உழவர் சந்தை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வார்டுகள், போக்குவரத்து பணிமனை, தங்கப்பா நகர், அல்லிகண்மாய் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.அருகில் உள்ள பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடை நீர் ரோட்டில் ஓடுகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன். ராஜ கண்ணப்பன் ஆகியோர் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வருவதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் பார்வையிட உள்ள இடங்களில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நகராட்சி சார்பில் சுறுசுறுப்பாக நடந்தது.ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11:25 மணிக்கு அமைச்சர்கள் வந்தனர். தங்கப்பா நகரில் ஒரு தெருவை மட்டும் பார்வையிட்டனர். அதன் பிறகு சாத்துார் ராமச்சந்திரன் கூறுகையில், ''30 இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. 8 இடங்களில் நீரை அகற்றும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வுகாண கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார்,'' என்றார்.மொத்தம், 15 நிமிடத்தில் ஆய்வை முடித்து அமைச்சர்கள் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர். தங்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் அமைச்சர்கள் பெயரளவில் ஆய்வு செய்து சென்றதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அஞ்சு மணி நேரம் ஆய்வு நடத்துனா மட்டும் விடிஞ்சுரப் போகுதா? போங்க. போய் பொழப்பைப் பாருங்க. அடுத்த முறை தகுதியானவங்களுக்கு ஓட்டுப் போடுங்க.