உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆனந்துார் பகுதியில் மின் குறைவழுத்தம் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்பு

ஆனந்துார் பகுதியில் மின் குறைவழுத்தம் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து நிலவும் குறைவழுத்த மின் பிரச்னையால் அப்பகுதி கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.ஆனந்துார் துணை மின் நிலையத்தில் காவனக்கோட்டை, ஆயங்குடி, கோவிந்தமங்கலம், சாத்தனுார், திருத்தேர்வளை, ராதானுார் ஊராட்சிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் காவனக்கோட்டை, ஆயங்குடி, கோவிந்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக குறைவழுத்த பிரச்னை நிலவுவதுடன் தினமும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.அப்பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுவதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மின்தடை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக ஊழியர்கள் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் குறைவழுத்தம் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி