மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
21 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
23 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
23 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டி அருகே குப்பையை முறையாக அகற்றாமல் எரிப்பதால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். ராமநாதபுரம்--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. இங்கு உள்ள பெரிய தொட்டியில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பையை முறையாக அகற்றி மறுசூழற்சி வளாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாறாக தொட்டியில் உள்ள குப்பை மட்டும் அவ்வப்போது அகற்றப்படுகிறது. தொட்டி நிரம்பி அருகில் சிதறி காணப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். குப்பைத் தொட்டியை உள்ளாட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
21 minutes ago
23 minutes ago
23 minutes ago