| ADDED : பிப் 21, 2024 11:02 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சுபமுகூர்த்த தினங்களில் பஸ் ஸ்டாண்ட், -அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரோடு, வழிமுருகன் கோயில் பகுதியில்போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவனை ரோட்டில் வணிக நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள்,ஓட்டல்கள் நிறைய உள்ளன. பஸ் ஸ்டாண்ட் - கேணிக்கரைரோட்டிலுள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஒவ்வொருமுகூர்த்த நாட்களிலும் ஏராளமான திருமணங்கள்நடக்கிறது.இதனால் இப்பகுதியில்போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டுவழி விடுமுருகன்கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. அப்போது ரோட்டோரத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களைகண்டபடி நிறுத்தினர்.இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.முகூர்த்த நாட்களில் வழிவிடு முருகன் கோயில், மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தகூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.