உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்

வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபுஷ்பம் 73. இவரது கணவர் நடராஜன் 2023ல் இறந்தார். ராஜபுஷ்பம் 3வது மகன் அருண் ராஜா உடன் வசித்து வந்தார். நேற்று இரவு அருண் ராஜா வழக்கம் போல் வீட்டிற்கு வந்து பார்த்த போது ராஜபுஷ்பம் வீட்டில் இறந்தது தெரிந்தது. அருண் ராஜா கேணிக்கரை போலீசுக்கு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி