உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெயில், மழையில் கலைநயத்தை இழந்து வரும் நயினார்கோவில் தேர்

வெயில், மழையில் கலைநயத்தை இழந்து வரும் நயினார்கோவில் தேர்

நயினார்கோவில்; பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் நாகநாத சுவாமி அம்பாள் தேர் அதிகாரிகள் அலட்சியத்தால் தேர் வெயில், மழையில் கலைநயத்தை இழந்து வருகிறது. அவ்விடத்தில் டூவிலர்களை நிறுத்துகின்றனர்.மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற பெருமை பெற்ற சவுந்தர்ய நாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயில் நயினார்கோவிலில் உள்ளது. இங்கு வருடம் முழுவதும் நாகதோஷம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிகாரங்களுக்கும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மற்றும் ஆடி பிரம்ம உற்ஸவம் என அம்பாள் மற்றும் சுவாமிக்கு தனித்தனியாக கொடியேற்றத்துடன் நடப்பது வழக்கம். அப்போது சுவாமி, அம்பாள் நான்கு மாட வீதிகளில் தேரில் வலம் வருவர்.இதன் முக்கிய விழாவாக அம்பாள் திருக்கல்யாணம் நடக்கும் நாளில் சுவாமி, அம்பாள் தென்னங்குருத்து மற்றும் கோரதம் எனப்படும் மிகப்பெரிய தேரில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில் கோயில் பராமரிப்பு இல்லாமல் உள்ள சூழலில், சுவாமிகளை சுமந்து செல்லும் வாகனங்களும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வைத்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக அம்பாள் சன்னதி முன்பு மழை மற்றும் வெயிலுக்கு மத்தியில் ரதத்தை கவனிப்பாரின்றி நிறுத்தி வைத்துள்ளனர்.பல நுாற்றாண்டுகளை கடந்து கோயில்களில் சுவாமி புறப்பாடுகளுக்கு தேர் செய்வது என்பது இயலாத காரியம். ஆகவே கலைநயத்துடன் உள்ள தேரினை பாதுகாக்க, ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை