மேலும் செய்திகள்
ரோட்டரி அலுவலகம் திறப்பு
20-Jul-2025
பரமக்குடி; பரமக்குடி ரோட்டரி சங்கத்தின் 2025ம் ஆண்டிற்கான 22ம் ஆண்டு பதவியேற்பு விழா நடந்தது. ரோட்டரி மாவட்ட கவர்னர் தினேஷ் பாபு தலைமை வகித்து பதவி பிரமாணம் செய்தார். புதிய தலைவர் சரவண குமார், செயலாளர் அன்வர்ராஜா, பொரு ளாளர் நவீன்குமார் பதவி ஏற்றனர். விழாவில் எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, ரோட்டரி மாவட்ட செயலாளர் சாதிக்அலி, மாவட்ட இயக்குனர் இளங்கோவன், ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் பரசுராமன் வாழ்த்தினார். தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பலருக்கும் ரோட்டரி சங்கம் மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நகரை உருவாக்கும் நோக்கில் ரோட்டரி சங்க நிகழ்ச்சி களில் பிளக்ஸ் பேனர்கள் தவிர்க்கப்பட்டு, பேப்பர் பேனர்கள் மற்றும் பேப்பர் கப்புகள் உட்பட சில்வர் வாட்டர் பாட்டில் என பயன்படுத்தப்படுகிறது என்றனர். தொடர்ந்து பிரமுகர்கள், பொதுமக்கள் வாழ்த்தினர்.
20-Jul-2025